

මෙම පළ කිරීම සඳහා අදහස් සබල කර නොමැත.
අදහස් එක් වෙමින් පවතී...
Fetching the latest discussions
நகர அபிவிருத்திப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பொருளாதார, பொதுீக, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தை தயாரிப்பதே அபிவிருத்தித் திட்டமாக வரையறுக்கப்படுகிறது.
1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 3(1) மற்றும் (2) ஆம் பிரிவுகளால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், 1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை (திருத்தச்) சட்டத்தின் 8(II)(A) பிரிவின் கீழ், அத்தகைய பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பதற்கான அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 3(1) மற்றும் (2) ஆம் பிரிவுகளின் படி, நகர அபிவிருத்தி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் ஒரு பிரதேசத்தை நகர அபிவிருத்திப் பிரதேசமாக பிரகடனப்படுத்த முடியும்.
1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 3(1) மற்றும் (2) ஆம் பிரிவுகளுக்கு உட்பட்டு, 1978 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 30 ஆம் திகதி 4/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ், கொழும்பு மாநகர சபை பிரதேசம் நகர அபிவிருத்திப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அதனை அடிப்படையாகக் கொண்டு, 1985 ஆம் ஆண்டு கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டம் கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் தயாரிக்கப்பட்டது. பின்னர், “கொழும்பு அபிவிருத்தித் திட்டம் – 1999” நகர அபிவிருத்தி அதிகாரசபையால் திருத்தமாக தயாரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு அது திருத்தியமைக்கப்பட்டு “கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டம் (திருத்தம்)” தயாரிக்கப்பட்டது. இருப்பினும், அந்த அபிவிருத்தித் திட்டத்தின் காலாவதி நெருங்கியதுடன், பிரதேசத்தின் புதிய பொதுீக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அம்சங்களில் மூலோபாய தலையீட்டின் தேவை ஏற்பட்டதாலும், நகர அபிவிருத்தி அதிகாரசபை கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்கான புதிய அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கும் பணியை முன்னெடுத்தது.