


මෙම පළ කිරීම සඳහා අදහස් සබල කර නොමැත.
අදහස් එක් වෙමින් පවතී...
Fetching the latest discussions
இலங்கையில் நகர அபிவிருத்தி அதிகார சபையானது நகர அபிவிருத்தியை ஒழுங்கு படுத்தும் அமைப்பாகும். இவ் அமைப்பு 1978ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரச் சபைச் சட்டத்தின் கீழ் நகர திட்டமிடலை அமுலாக்கும் பிரதான நிறுவனமாக செயற்படுகிறது.
நகர அபிவிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு அபிவிருத்தித் திட்டத்தினைத் தயாரிப்பதென்பது. அதிகார சபைச் சட்டங்களின் அடிப்படையில் மிகவும் முக்கியமான அம்சமாகும். இதனை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட பிரதேசத்தின் அபிவிருத்திகளை ஊக்குவித்து வழிநடத்துவதற்காக அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் அதிகாரத்தை 1982ஆம் ஆண்டு 4ஆம் இலக்க (பகுதி II A பிரிவு 8A (1) சட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபை கொண்டிருக்கின்றது.
இதனடிப்படையில், மன்னார் நகர சபைப் பிரதேசமானது நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1978ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அபிவிருத்திப் பிரதேசமாக 1 ஆம் திகதி ஆனி மாதம் 1979ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. பின்பு 22ஆம் திகதி பங்குனி மாதம் 1998ஆம் ஆண்டு மன்னார்த் தீவு முழுவதையும் நகர அபிவிருத்திப் பிரதேசமாக நகர அபிவிருத்தி அதிகார சபையால் அதன் 1978ஆம் ஆண்டு 41ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 7591ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தல் மூலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.