


මෙම පළ කිරීම සඳහා අදහස් සබල කර නොමැත.
අදහස් එක් වෙමින් පවතී...
Fetching the latest discussions
கந்தளாய் நகரமானது கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது 1978 ஆம் ஆண்டு 41 ஆம்இலக்கத்திற்கான நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் பிரிவு 3 (1) இன் அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் .லக்கம் 690-3 இன் 1991.11.26 திகதியின் படி இந்நகரம் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசமானது 40571 ஹெக்டெயர் நிலப்பரப்பையும் 23 கிராம நிலதாரி பிரிவுகளையும் கொண்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டமானது 11 வருட காலத்திற்கு 2031 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் 1982 ஆம் ஆண்டு 04 ஆம்,லக்கத்திற்கான திருத்தச் சட்டத்தின் 2 (அ) பகுதியில் 8 (அ) படி நகர அபிவிருத்தி அதிகார சபையானது அதிகாரப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருகோணமலை பெரு நகர அபிவிருத்தி பகுதிக்கான அபிவிருத்தி திட்டம் ப்பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டு 2030 ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய திட்டமிடல் தேவைகள் மற்றும் சட்ட தேவைகளின் அடிப்படையில் 2022 2031.
எனவே, கந்தளாய் அமைவிடமானது இதன் வடக்கில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவும் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவும் கிழக்கில் சேருவில பிரதேச செயலாளர் பிரிவும் மேற்கில் அநுராதபுரம் பிரதேச செயலாளர் பிரிவும் மற்றும் தெற்கில் பொலன்னறுவை மாவட்ட எல்லைகளைக் கொண்டுள்ளது.
கந்தளாய் அபிவிருத்தி திட்டமானது கந்தளாயின் முழு பிரதேச பிரிவையும் உள்ளடக்கியதுடன், இப்பிரதேசத்தின் பௌதிக, பொருளாதார, சுற்றாடல் மற்றும் சமூக அபிவிருத்தி அம்சங்களை ஆராய்ந்து இவ் அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட முலொபாயத்திட்டங்களுக்கு விரிவான திட்டங்களை உருவாக்கவும் மற்ற பகுதிகளுக்கு பொதுவான திட்டங்களையும் மற்றும் கட்டிட ஒழுங்கு முறைகளையும் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.