


මෙම පළ කිරීම සඳහා අදහස් සබල කර නොමැත.
අදහස් එක් වෙමින් පවතී...
Fetching the latest discussions
சமூக, பொருளாதார, பௌதீக மற்றும் சூழல் காரணிகளின் இணைந்த செயற்பாட்டினால் நகர்ப்புறம் ஒன்றின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. மேற்கூறப்பட்ட காரணிகளின் பரவலாக்கமானது நகர்ப்புறம் ஒன்றில் வளர்ச்சி அல்லது வீழ்ச்சிக்கு உதவலாம். இவற்றை ஒரு படிமுறை ஒழுங்கில் பரவலாக்க எந்தவொரு நகர்புறத்திற்கும் திட்டமிடல் தலையீடுகள் அவசியமாகின்றது.
நகர அபிவிருத்தி பகுதிகளாக குறித்த அமைச்சசரினால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளின் சமூக, பொருளாதார, பௌதீகம் சார்பான இணைந்த திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல்களை உந்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையானது நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1978ம் ஆண்டின் 41வது இலக்கச் சட்டத்தினை வரையறுத்துள்ளது. ஆகவே இலங்கை நகர அபிவிருத்தியின் நகரத்திட்டமிடல் மற்றும் செயற்படுத்தலுக்கான முகவர், வழிநடத்துதலின் திறவுகோலாக நகர அபிவிருத்தி அதிகார சபை செயற்பட உருவாக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி பகுதியாக குறித்த ஒரு பிரதேசத்தினை பகுதி 3 (1)ன் கீழ் அதன் அமைச்சின் விருப்பில் அபிவிருத்திக்கு உகந்த பிரதேசமாக இனம் காணப்பட்டு வர்த்தமானியினூடாக வெளியிட்டு பிரகடனப்படுத்தலாம். அதற்கு அமைவாக 2005 ஜூன் 30ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1399/16 இன் படி நிந்தவூர் பிரதேச சபை பிரிவானது நகர அபிவிருத்தி பகுதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
அபிவிருத்தி திட்டத்தினை உருவாக்குதல் தொடர்பான விடயமானது நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1978ம் ஆண்டு 41ம் இலக்க சட்டமானது திருத்தப்பட்டு 1982ம் ஆண்டும் 4ம் இலக்க சட்டத்தில் 3ம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே தரப்பட்ட ஏற்பாட்டினால், நிந்தவூர் பிரதேச சபைக்கான நகர அபிவிருத்தி திட்டமிடல் 2017ல் ஆரம்பிக்கப்பட்டது. இது அடுத்த 10 வருடங்களுக்கான அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது. அதன் பின்னர் வர்த்தமானி அறிவித்தலினுாடாக வெளியிடப்படும்.