

මෙම පළ කිරීම සඳහා අදහස් සබල කර නොමැත.
අදහස් එක් වෙමින් පවතී...
Fetching the latest discussions
நகர அபிவிருத்திப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொருளாதாரம்,
பௌதீகம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் குறித்து கவனம் செலுத்தி,
குறித்த துறைகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தலின் பொருட்டு ஒழுங்கிணைந்த
திட்டமொன்று வகுக்கப்பட்ட செயற்பாடே அபிவிருத்தி திட்ட வகுத்தல் என அழைக்கலாம்.
1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் 3(1) மற்றும் (2)
ஆகிய பிரிவுகளின் தத்துவங்களின் பிரகாரம் ஏதுமொரு பிரதேசம் நகர அபிவிருத்தி
அதிகார எல்லையாக நகர அபிவிருத்தி குறித்து பொறுப்பு அமைச்சரினால்
பிரகடனப்படுத்தப்படலாம் என்பதோடு, அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்திற்கு
உரிய அபிவிருத்தித் திட்டத்தை வகுக்கும் அதிகாரமானது 1982ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க
நகர அபிவிருத்தி அதிகார சபைச் (திருத்தப்பட்ட) சட்டத்தின் 8(II) அ வின் கீழ்
நகர அபிவிருத்தி அதிகார சபையினிடம் பகரளிக்கப்பட்டுள்ளது.
1930ஆம் ஆண்டில் நகரசபை அதிகார எல்லையாகக் காணப்பட்ட மொரட்டுவை நகரமானது
1998ஆம் ஆண்டில் மாநகர சபையாகப் பிரகடனப்படுத்தப்பட்டதோடு, 1979 மார்ச் 07ஆம்
திகதிய மற்றும் 26/8ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்
நகர அபிவிருத்தி குறித்து பொறுப்பு அமைச்சரினால் மொரட்டுவை நகரமானது
நகர அபிவிருத்தி அதிகார எல்லையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த அதிகார எல்லையின் பொருட்டு நகர அபிவிருத்தி அதிகார
சபையினால் முதல் முறையாக 2005–2020ற்காக வகுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டமானது
2005 ஜூன் 07ஆம் திகதி மற்றும் 1396/7ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2005–2020ற்காக வகுக்கப்பட்ட மொரட்டுவை அபிவிருத்தித் திட்டத்தின் கால எல்லை
முடிவடைந்துள்ள காரணத்தினாலும், பிரதேசத்தின் புதிய பௌதீக, பொருளாதார,
சுற்றுச்சூழல் மற்றும் சமூக துறைகளுக்கான மூலோபாய தலையீடுகளின் தேவைகள்
உருவாகியுள்ளதாலும், மொரட்டுவை நகரத்திற்கான புதிய அபிவிருத்தித் திட்டமொன்று
வகுப்பதற்கான பணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.