


Share your perspective
Please log in to share your thoughts and join the discussion.
Loading comments...
Fetching the latest discussions
2023 - 2033 ஆண்டுகளுக்கான தலாவ பிரதேச சபை அதிகார பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு நகர அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்படுவதோடு, அதன் மூலம் பிரதேசத்தின் பௌதீக, சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளில் சிறந்த அபிவிருத்தியை, 2033 ஆம் ஆண்டாகும் போது அடைந்து கொள்வதற்கு தேவையான மூலோபாயம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்கும் போது உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பக் கருவிகள், உத்திகள் மற்றும் ஆய்வுகள் மூலம் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி இந்த அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தித் திட்டம் என்பது, மிகவும் பரந்த அளவிலான நோக்கத்தைக் கொண்ட ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி பௌதீக, பொருளாதார, சமூக மற்றும் சூழல் போன்ற துறைகளின் கீழ் முறையாகத் தயாரிக்கப்படும் கருவியொன்றாகும்.
இலங்கையின் நகர அபிவிருத்தியில் முதன்மையான நிறுவனமாக நகர அபிவிருத்தி அதிகாரசபை கடமையாற்றுவதுடன், மேற்குறிப்பிடப்பட்ட துறைகளில் கூட்டு அபிவிருத்தியினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஊடாக அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது.