


இந்த இடுகைக்கு கருத்துகள் இயக்கப்படவில்லை.
கருத்துகள் பதிவேற்றப்படுகின்றன...
Fetching the latest discussions
1978 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்கத்திற்கான நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தில் 1982 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்கத்திற்கான திருத்தச் சட்டத்தில் II (அ) பகுதியில் 8(அ) படி நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசமாக பெௌதீக ரீதியாக அபிவிருத்தி
செய்தல் மற்றும் செயல்படுத்தும் அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குரியதாக காணப்படுகின்றது. 1980.08.04 ஆம் திகதி 100/04 இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ், 03 கிராம
சேவகர் பிரிவு (மீகஹகொடுவ, குளியாப்பிட்டி நகரம், எஸ்செத்தும) குளியாப்பிட்டி நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரப் பிரிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே பிரதேசத்திற்கு அண்மித்து நடைபெறுகின்ற விரைவான வணிக அபிவிருத்தி மற்றும் கல்வித் துறையின் மேம்பாட்டை காரணமாக கொண்டு நடைபெறுகின்ற அபிவிருத்தி இந்த அபிவிருத்தி பிரதேசத்தை விரிவுபடுத்த காரணமானது.
அதன்படி குளியாப்பிட்டி நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகார பிரதேசம் 23 கிராம சேவகர் பிரிவிற்கு உரித்துடைய 44.4 சதுர கி.மீ. நில பிரதேசம் வரை 2021.01.04 ஆந் திகதி 2209/12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினால் விரிவு படுத்தப்பட்டது. அவ்வாறே முன்மொழியப்பட்ட பிரதேசம் வளமான விவசாயப் பிரதேசம் என்பதனால், அந்த விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு
முறையான திட்டத்திற்கு அமைய அபிவிருத்தி செய்ய வேண்டிய நகரமாகவும் குளியாப்பிட்டி நகரத்தை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றை ஒழுங்கமைப்பதற்கு தேவை என்று நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அடையாளம் காணப்பட்டது.