


இந்த இடுகைக்கு கருத்துகள் இயக்கப்படவில்லை.
கருத்துகள் பதிவேற்றப்படுகின்றன...
Fetching the latest discussions
அபிவிருத்தி திட்டமெனுவது, சாதாரணமாக ஒரு பிரதேசத்திலுள்ள உடைமைகள், பொருளாதார, சமூக மற்றும் சூழல் காரணிகள், மூலதன ரீதியாக, முன்னேற்ற அபிவிருத்திக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற விதத்தைக் காட்டுகின்ற மற்றும் அதற்காக பிரதேசத்தின் தரப்பினர்கள், விசேடமாக அங்கு வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டிய முறையைக் காட்டுகின்ற, சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எழுத்து வடிவிலான அறிக்கையாகும்.
தேசிய அரசுப் பேரவையின் 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 8 “அ” பிரிவின் அதிகாரங்களின் பிரகாரம், ஏற்புடைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுகின்ற அதிகாரப் பிரதேசத்திற்கான அபிவிருத்தி திட்டம் ஒன்றை தயாரிக்கும் கடமைப் பொறுப்பு 1982 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை (திருத்த) சட்டத்தின் 8 “அ” பிரிவின் மூலம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஹோமாகம அபிவிருத்தி திட்ட தயாரிப்பின் பின்னணியை நோக்கிப் பார்க்கும் போது, இந்த பகுதியானது 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி இலக்கம் 4/1 வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் முதன்முதலாக நகர அபிவிருத்தி பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி 7 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.
அதன் பின்னர், வரிசைப்படி 1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி இல. 56/6 வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அத்துருகிரிய பிரதேசத்தை உள்ளடக்கியும், 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி இல. 234/7 ஆம் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் மத்தேகொட பகுதியை உள்ளடக்கியும், 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி இல. 1084/20 ஆம் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் மீதமுள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையிலும் தற்போதைய ஹோமாகம பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதி முழுவதும் (சதுர கிலோமீட்டர் 138) நகர அபிவிருத்தி பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.