


இந்த இடுகைக்கு கருத்துகள் இயக்கப்படவில்லை.
கருத்துகள் பதிவேற்றப்படுகின்றன...
Fetching the latest discussions
இலங்கையில்,நகர அபிவிருத்தி அதிகாரசபை நாட்டில் நிலையான அபிவிருத்தியைப் பேணுவதற்கு முக்கிய பிரதான நிறுவனமாகும். நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டபூர்வமான அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சட்ட இலக்கம் 41 ன் 1978 ஆம் ஆண்டின் கீழ் உருவாக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டின் சட்டத்தின்படி 04 ம் இலக்க பிரிவு 08 (அ) திருத்தத்தின் படி. நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபை (யூ.டீ.ஏ.) நகர அபிவிருத்திப்பகுதி என அறிவிக்க சட்டப்பூர்வ அதிகாரங்களை கொண்டுள்ளது. நகர அபிவிருத்தித்திட்டங்களை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல். அந்த அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு யு.டி.ஏ..மிஹிந்தலை பிரதேசசபை பகுதியை நகர்ப்புற அபிவிருத்தி பகுதியாக அறிவித்துள்ளது. இது 2001.04.10 ம் வர்த்தமானி எண் 1179/11. இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையானது பிரதேச சபை பகுதியின் நிலையான அபிவிருத்தியை அடைய அது பௌதீக, பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களில் கவனம் செலுத்துகின்றது.
2011 ஆம் ஆண்டில் யூ.டி.ஏ, 6 பிரதேசப்பிரிவுகளை உள்ளடக்கி மிஹிந்தலை பிரதேச சபை பிரதேச அபிவிருத்தி திட்டத்திற்கான வரைவுத் திட்டத்தைத் தயாரித்திருந்தது. ஆனால் காலப் போக்கில் வளர்ச்சி போக்குகள் மற்றும் பிற முன்னேற்ற சூழல்களும் மாற்றமடைந்துள்ளன. இதனால், யூ.டி.ஏ., மிஹிந்தலை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கான புதிய அபிவிருத்தித் திட்டத்தைத் உருவாக்கி உள்ளது. இது பௌதீக, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் விடயங்களை நிலையான அபிவிருத்தி முறையில் மேம்படுத்துவதற்காக அமைகின்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையானது மிஹிந்தலை உள்ராட்சி அதிகாரசபையின் 25 கிராம சேவைப்பிரிவு மற்றும் 23580 ஹெக்டேர் நிலப்பரப்பு என்பவற்றை நகர்ப்புற அபிவிருத்திப் பகுதி என அறிவித்துள்ளது. அதில் இருந்து 15 கிராம சேவைப் பிரிவு மற்றும் 8369 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு உள்ளடங்கலாக வலயங்கள், திட்டமிடல் மற்றும் கட்டட ஒழுங்கு விதிகள் உள்ளிட்ட நகர அபிவிருத்தி திட்டங்களை தயார் செய்துள்ளது.