


Comments are not enabled for this post.
Loading comments...
Fetching the latest discussions
நகர அபிவிருத்தி அதிகார சபையானது இலங்கையில் நகர அபிவிருத்தியை ஒழுங்குபடுத்தும் அமைப்பாகும். அதனடிப்படையில் 1978ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரச் சபைச்சட்டத்தின் கீழ் நகர திட்டமிடலை அமுலாக்கும் பிரதான நிறுவனமாக செயற்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 1982 ஆம் ஆண்டின் 45 இலக்க திருத்தச்சட்டத்தின் மூலம் நகர அபிவிருத்தி பகுதிகளுக்குள் அபிவிருத்திகளை ஊக்கப்படுத்திவழிநடத்தக்கூடிய வகையிலான அபிவிருத்தி திட்டங்களை தயாரிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நகரத்தின் எதிர்காலத்திற்கான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது சமூக, பொருளாதார, பௌதீக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் அடிப்படையில் நோக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, நகரத்தின் நல்வாழ்வுக்காகவும், நகரத்தின் புதிய அபிவிருத்தி பயன்படுத்திக்கொள்ளவும்,அபிவிருத்திப்பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு நற்பலன்களை வழங்கவும், அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. வாய்ப்புக்களைப் அபிவிருத்தி
இதன்அடிப்படையில், கிளிநொச்சி நகரப்பிரதேசமானது நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1978 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 1644/9 வர்த்தமானி அறிவித்தலின் கீழ் 2010 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 9ஆம் திகதி நகர அபிவிருத்திப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நகர அபிவிருத்தி அதிகார சபையானது, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக்கொண்டு அபிவிருத்திப்போக்கினை வழிநடத்தவும், நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்தவும், கிளிநொச்சி நகர அபிவிருத்திப் பகுதிகளுக்கான அபிவிருத்தி திட்டத்தின் உருவாக்கத்தை தொடங்கியது.