


Share your perspective
Please log in to share your thoughts and join the discussion.
Loading comments...
Fetching the latest discussions
அபிவிருத்தி திட்டமென்பது நகர பகுதியின் தற்போதைய நிலைமைகளை வழங்கி (தற்போது எங்கு உள்ளது) அதன் எதிர்கால அபிவிருத்தி தூரநோக்கின் காட்சிகளை பிரதிபலிப்பதாகும். சூழ்நிலை பகுப்பாய்வுகளின் மூலம் அபிவிருத்தி மாற்றங்களின் போக்கினை அடையாளம் காணவும், எதை நோக்கி எமது முன்னுரிமை தேவைகளை அடையாளப்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தி கட்டுப்படுத்த தேவையான தந்திரோபாயங்கள் மற்றும் செயற்திட்டங்களை உருவாக்கவும். எமது தூரநோக்கை அடைவதற்கு நாம் எந்த வகையான தலையீடுகளை மேற்கொள்வது என்பது தொடர்பாக இனங்கானக்கூடியதாக அமைகின்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதென்பது அதிகார சபை சட்டங்களின் அடிப்படையில் மிகவும் முக்கியமான அம்சமாகும். இதனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட பிரதேசத்தின் அபிவிருத்திகளை ஊக்கிவித்து வழிநடத்துவதற்காக அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை தயாரிக்கும் அதிகாரத்தை 1982 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க (பகுதி II, பிரிவு 8A(1) சட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரம் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் வவுனியா நகர சபை பிரதேசமானது நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1978 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அபிவிருத்திப் பிரதேசமாக 1 ஆம் திகதி ஆனி மாதம் 1979 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. பின்பு 26.11.2009 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1629 / 18 இன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டது. வவுனியா நகர சபை பகுதி (முழுமையாக), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை (பகுதி), வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை, போன்ற உள்ளுாராட்சிகளை உள்ளடக்கியது. வவுனியா நகர அபிவிருத்தித் திட்டம் 2009 ஆம் ஆண்டு வர்த்தமானியாக அறிமுகப்படுத்தப்பட்டு திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்படி வர்த்தமானி இலக்கம் 2352/09.
இதன்படி நகர அபிவிருத்தி நடவடிக்கைகளை வழி நடத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அத்துடன் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் அரசாங்க கொள்கை மற்றும் தேசிய பௌதீக திட்டமிடலை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் 2050 ஆம் ஆண்டிற்குள் வவுனியா நகரத்தை அபிவிருத்தி செய்ய நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.