


Comments are not enabled for this post.
Loading comments...
Fetching the latest discussions
நகர அபிவிருத்தி திட்டம் நகரம் ஒன்றின் எதிர்காலத்தை தீரமானிக்கும் முக்கிய காரணியாகும். அத்திட்டத்தை தயாரிப்பதற்காக சமூக, பொருளாதார, கலாசார மற்றும் சுற்றாடல் காரணிகள் அடிப்படையாக கொள்ளப்படுகின்றன. நகர அபிவிருத்தி அதிகாரசபை நகர அபிவிருத்திக்கான ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக செயல்படுவதுடன், அதற்கு 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி சபைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் பிரதேசங்களுக்கான நகர திட்டவமைவமைப்புகளை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்படிச் சட்டத்தின் 3(அ) பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின்படி பிரதேசமொன்றை நகர அபிவிருத்தி பிரதேசமாக வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிட்டதன் பின்னர் குறித்த பிரதேசத்திற்கான அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முக்கிய பணியாகும். 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள 1982ஆம் அன்டின் 04ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலம் அதற்கான சட்ட ரீதியான அடிப்படை வகுக்கப்பட்டுள்ளது.
ஹக்மனை நகர அபிவிருத்தி பிரதேசம் 1286/7ஆம் இலக்க மற்றும் 2003-04-29ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் ஒரு நகர அபிவிருத்திப் பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் ஹக்மனை பிரதேச செயலகப்பிரிவின் நகர மத்தியில் 3.06 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் காணப்படும் 11 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்குகின்றன. ஹக்மன நகர அபிவிருத்தி பிரதேசத்திற்காக இதுவரை அபிவிருத்தி திட்டமொன்று தயாரிக்கப்படாத காரணத்தினால் சமகால பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் தரங்கள் தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதனூடாக தற்போதைய பிரச்சனைகள் மற்றும் வளங்களை இனங்கண்டு அவற்றை நேர்த்தியான முறையில் பயன்படுத்தி தற்போதுள்ள பிரச்சினைகளை குறைத்துக்கொள்வதையும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 2019 தொடக்கம் 2030 வரையான காலப்பகுதிக்கு வலுவுள்ளதாக காணப்படும்.