


Comments are not enabled for this post.
Loading comments...
Fetching the latest discussions
1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் கீழ் 1978 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபை தாபிக்கப்பட்டதுடன் "அபிவிருத்திப் பிரதேசங்கள்" என பிரகடனப்படுத்தப்படும் பிரதேசங்களை பொருளாதார, சமூக மற்றும் பௌதீக ரீதியாக அபிவிருத்தி செய்வதற்காக ஒன்றிணைக்கப்பட்ட திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல். நடைமுறைப்படுத்தல், மேம்படுத்தல் ஆகியன அதன் பிரதான குறிக்கோளாகக் காணப்பட்டன. அச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் ஏதேனும் ஒரு பிரதேசம் அபிவிருத்திக்குப் பொருத்தமான பிரதேசம் என அமைச்சர் அவர்கள் கருதும் பட்சத்தில் அப் பிரதேசம் ஓர் அபிவிருத்திப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட முடியும் என்பதுடன் அவ் அபிவிருத்திப் பிரதேசத்திற்காக குறித்தொதுக்கப்பட்ட எல்லைகள் மற்றும் காணிகளை அடையாளப்படுத்தி பிரதேசங்கள் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். அதன் பிரகாரம் 1982 ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் அவ்வாறு ஓர் அபிவிருத்திப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களைத் தயாரிப்பதற்கான நடவடிக்கை முறையின் 8 "அ" தொடக்கம் 8 "ஓ" வரையான பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஹம்பாந்தோட்டை மாநகநர சபை அதிகார எல்லைப் பிரதேசம் ஐந்து சந்தர்ப்பங்களில் அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அதிகார பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது. நகர
38/16 ஆம் இலக்க 01.06.1979 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அதிகார பிரதேசம்.
223/16 ஆம் இலக்க 17.12.1982 ஆம் திகதிய இலங்கை கடலோர வலய வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட மத்திய உயர்வற்றுப் பெருக்கு தொடக்கம் கடற்கரை வரை 01 கிலோ மீற்றர் எல்லையினை உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்.
747/7 ஆம் இலக்க 29.12.1992 ஆம் திகதிய மாத்தறை கதிர்காமம் புகையிரத வீதிக்காக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல்
1090/5 ஆம் இலக்க 26.06.1999 ஆம் திகதிய றுகுனுபுர கருத்திட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல்
1639/12 ஆம் இலக்க 02.02.2010 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட ஹம்பாந்தோட்டை மாநகநர சபை அதிகார எல்லைப் பிரதேசங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல்.
2007 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை நகர சபை அதிகார பிரதேசத்திற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஓர் அபிவிருத்தி திட்டம் தயார் செய்யப்பட்டதுடன் அத் திட்டம் 1499/33 ஆம் இலக்க 2007.06.01 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவ் அபிவிருத்தி திட்டம் 2007 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அமுலில் இருக்கும். ஹம்பாந்தோட்டை நகர சபை அதிகார பிரதேசத்திற்காக 02 கிராம அலுவலர் பிரிவுகள் மாத்திரம் அதாவது ஹம்பாந்தோட்டை கிழக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 9.19 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் உள்ளடக்கப்பட்டதுடன் அத் திட்டம் மூலம் தற்போதுள்ள நகர சபை அதிகார பிரதேசத்தின் எல்லைகள் விரிவாக்கப்படல் வேண்டுமென யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 1639/12 ஆம் இலக்க 2010.02.02 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அப்போது நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர சபை அதிகார பிரதேசம் மேலும் விரிவாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை மாநகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதில் ஹம்பாந்தோட்டை மேற்கு, ஹம்பாந்தோட்டை கிழக்கு, சிரிபோபுர, கேலியபுர, ஸாமோதாகம மற்றும் மிரிஜ்ஜவில ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குச் சொந்தமான 83 சதுர கிலோ மீற்றர்கள் விஸ்தீரணமுள்ள பிரதேசம் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாநகர の அதிகார பிரதேசத்தில் உள்ளடங்கும் பிரதேசங்கள் படம் 1.1 இல் காட்டப்பட்டுள்ளது.
மேலும் பிரதேச ரீதியாக நிலவும் அபிவிருத்தி ஏற்றத் தாழ்வுகளை குறைக்கும் நோக்கில் 1994 ஆம் ஆண்டு தெற்கு அபிவிருத்தி வலயம் தாபிக்கப்பட்டதுடன் அதன் நிர்வாகம் தென்மாகாண அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பொண்டு வரப்பட்டது. அதன் கீழ் துரித பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு முன்னணிக் கருத்திட்டமாக ஹம்பாந்தோட்டைத் துறைமுகக் கருத்திட்டம் தாபிக்கப்பட்டதுடன் அதனூடாக புதியதோர் அபிவிருத்திக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதியதொரு நகர மையமாக சர்வதேச வியாபாரத்திற்கான நுழை வாயிலைத் திறந்து விடுதல். கைத்தொழில்களை நிறுவுதல், பல்பக்க போக்குவரத்து மையங்களை நிர்மாணித்தல், தெற்கு அதிவேகப் பாதைக் கருத்திட்டம், மாத்தறை கதிர்காமம் புகையிரதப் பாதைக் கருத்திட்டம், மத்தல சர்வதேச விமான நிலையம், மாகம் றுகுனுபுர மாநாட்டு மண்டபம், மாவட்டத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளை ஒன்றிணைத்து நிர்வாகக் கட்டடத் தொகுதியை அமைத்தல் மற்றும் வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள் ஆகியன முன்னணிக் கருத்திட்டங்களாக தாபிக்கப்பட்டது. தற்போது இக் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் ஹம்பாந்தோட்டை நகரத்தினை துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமையால் உபாயவழிமுறை அபிவிருத்தி திட்டம் ஒன்றை தயாரித்தல் ஒரு முன்னணி தேவைப்பாடாக இனம் காணப்பட்டுள்ளதுடன் அதன் பிரகாரம் தயார் செய்யப்படும் இவ் அபிவிருத்திக் கருத்திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படும்.